பரமத்திவேலூர் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலி.
பரமத்திவேலூர் அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலியானார்.;
பரமத்திவேலூர், டிச.20- திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே ஜல்லிப் பட்டியை சேர்ந்தவர் களான குருசாமி (54), ராஜா (55), சுப்பிரமணி (52) ஆகிய மூவரும் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள ஒரு வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலையில் கூலி வேலை பார்த்து வந்தனர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் பாண்டமங்கலம் வந்து விட்டு மீண்டும் பிலிக்கல்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந் தனர். நெட்டையாம்பாளையம் பிரிவு அருகே செ ன்றபோது கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குருசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அறிந்து வந்த வேலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ராஜா,சுப்பிரமணி ஆகிய இருவரையும் அந்தவழியாக சென்றவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம். குறித்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.