முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த அமைச்சர்

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சின்னாளபட்டியில் ரூ.78.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

Update: 2024-12-21 04:07 GMT
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆய்வகம் மற்றும் அலுவலகம், சின்னாளபட்டி, வடக்குத் தெருவில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நாடகமேடை, செக்காபட்டியில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன கழிப்பறை கட்டடம் என மொத்தம் ரூ.78.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். சின்னாளப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆய்வகம் மற்றும் அலுவலகம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு அவசர சிகிச்சைப் பிரிவு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்றையதினம் சின்னாளப்பட்டி பகுதியில் மொத்தம் ரூ.78.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவ்விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி முருகேசன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, சின்னாளப்பட்டி பேரூராட்சித் தலைவர் பிரதீபா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Similar News