விவசாயிகள் கூட்டம் தள்ளிவைப்பு
ஈரோட்டில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24-ந்தேதி நடக்கிறது
ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ.தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். எனவே ஈரோடு கோட்டத்தில் உள்ள ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட் டங்களுக்குட்பட்ட விவசாயிகள் அன்று காலை 11 மணிக்கு, விவசாய நிலங்களை நில அளவைத்துறை மூலம் அளவீடு செய் தல், விவசாய நிலங்கள், பாதைகள், ஓடைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுதல் போன்ற கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு காணலாம். இந்த தகவலை ஈரோடு ஆர்.டி.ஓ. ப.ரவி தெரிவித்துள்ளார்.