தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவு

தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவு

Update: 2024-12-22 11:53 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில், வருவாய்த்துறை பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தாத தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வருவாய்த்துறை மாதாந்திர ஆய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் பட்டா மாற்றம், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.'பெஞ்சல்' புயலின் போது, சில வருவாய்த்துறை அலுவலர்கள் சரிவர பணி செய்யவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது. தாலுகா அலுவலகங்களில் பட்டா, பட்டா மாற்றம், ஜாதி சான்றிதழ்கள் நிலுவையில் இருந்தது கண்டறியப்பட்டது. இப்பணிகளை, உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும் என, தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாவில், இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதால், மூன்று தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

Similar News