போளூரில் மாபெரும் இறகுப்பந்து போட்டி.
நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடினர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகுதியில் சிகரம் பேட்மிட்டன் அகாடமியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவிலான மாபெரும் இறகு பந்து போட்டி நடைபெற்றது. போளூர் டவுன் பகுதியில் சிகரம் பேட்மிட்டன் அகாடமியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அளவிலான மாபெரும் இறகு பந்து போட்டி ஜெய் வேளாண் உரக்கடை, வில்லேஜ் ரோஸ் மில்க், பாலமுருகன் டிராவல்ஸ் உரிமையாளர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. மாபெரும் இறகுப்பந்து போட்டியை முன்னிட்டு போளூர், திருவண்ணாமலை, வேலூர், பாண்டிச்சேரி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான இறகுப்பந்து போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடினர் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.