மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-12-23 13:12 GMT
தேனி மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தேனி மாவட்டத்தில் அரசு நியாய விலை கடைகளில் ஆய்வுக்கு செல்லும் தேனி மாவட்ட ஆட்சியர் ரேஷன் கடை பணியாளர்களுக்கு எதிராக செயல்பட்டு அபராதம் விதிப்பதாகவும் மேலும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தமிழகம் முழுவதும் கொடுக்கப்பட்ட சுற்றறிக்கையின் படி செயல்படாமல் தேனி மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக நியாய விலை கடைகளுக்கு சென்று அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர் மேலும் சேமிப்பு கிடங்கில் எடை குறைவு குறித்து சென்று ஆய்வு செய்யாமல் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து அபராதம் விதிப்பதாகவும் இது குறித்து பலமுறை தேனி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்தும் பணியாளர்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பதாக தேனி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நியாய விலை கடை பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News