நாளைய மின் தடை: கபிலர்மலை

செவ்வாய்க்கிழமை (டிச. 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது;

Update: 2024-12-23 14:08 GMT
பரமத்தி வேலூர், டிச. 23: பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெற்றவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (டிச. 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என பரமத்தி வேலூர் மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்ப்பந்தல், அண்ணாநகர்,கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

Similar News