சேலம் கோட்டத்தில் இருந்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

மேலாண்மை இயக்குநர் தகவல்

Update: 2024-12-24 01:22 GMT
சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மார்கழி மற்றும் தை மாதங்களில் இருமுடி செலுத்தும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் கோட்டம் மூலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் மற்றும் பெங்களூருவில் இருந்து குழுவாக செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் அருகில் உள்ள சேலம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளைகள், பஸ் நிலையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News