விருத்தாசலத்தில் அதிமுக நகர கழகம் சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சி

நகர செயலாளர் சந்திரகுமார் தலைமையில் நடந்தது;

Update: 2024-12-24 10:11 GMT
எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு விருத்தாசலம் ஸ்டேட் வங்கி பஸ் நிறுத்தம் அருகில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு விருத்தாசலம் நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் சந்திரகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் என்ஜினியர் ரவிச்சந்திரன், மாநில பேரவை துணைச் செயலாளர் அருள் அழகன், மண்டல செயலாளர் வக்கீல் அருண், மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ், நகர துணை செயலாளர் அரங்க மணிவண்ணன், முன்னாள் அரசு வக்கீல் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நிர்வாகிகள் தங்கராசு, புஷ்பா வெங்கட வேணு, முக்தார் அலி, ஆண்டாள் கழிவரதன், வளர்மதி கண்ணன், மலர்கொடி உத்திராபதி மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

Similar News