நகர கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்த அமைச்சர்!

சுமைதாங்கி நகர கூட்டுறவு சங்கம் திறப்பு விழா!

Update: 2024-12-25 04:21 GMT
வாலாஜா ஒன்றியம், கடப்பேரி ஊராட்சிக்குட்பட்ட உதயம் நகரில் சுமைதாங்கி நகர கூட்டுறவு சங்கத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு ஆட்சியர் சந்திரகலா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய கிளையை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், மற்றும் கால்நடை வளர்ப்பு கடன் என 56 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். காவேரிப்பாக்கம் பேரூராட்சி, திருப்பாற்கடல், அத்திப்பட்டு ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள், மகளிர்கள் பயன் பெறும் வகையில் இந்த புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளதாக அப்போது அவர் கூறினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சி.மாணிக்கம், காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர்கள் ஓச்சேரி எம்.பாலாஜி, தெய்வசிகாமணி, நகர செயலாளர் பாஸ் என்ற நரசிம்மன், கடப்பேரி ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News