சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

விழா

Update: 2024-12-25 04:24 GMT
கள்ளக்குறிச்சியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா டி.ஆர்.ஓ., தலைமையில் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா டி.ஆர்.ஓ., சத்திய நாராயணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் கூறியதாவது : சிறுபான்மையினருக்கு மின்மோட்டார்களுடன் கூடிய கட்டணமில்லா தையல் இயந்திரமும், ஜெருசேலம் புனித பயணத்திற்கு அரசு நிதியுதவி, கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்க்க, புனரமைக்க ரூ.20 லட்சம் வரை அரசு நிதியுதவி வழங்குகிறது. கிராமப்புற சிறுபான்மையின மாணவிகளுக்கு 3 முதல் 5ம் வகுப்பு வரை ரூ.500ம், 6ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்குகிறது. டாம்கோ மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 143 பயனாளிகளுக்கு ரூ.137.75 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொருளாதாரம் மேம்பட அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பயன்படுத்திட வேண்டுமென தெரிவித்த டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கிறிஸ்துவ தேவாலய உபதேசியர், பணியாளர்கள் 6 பேருக்கு நலவாரிய அட்டை வழங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நல அலுவலர் கீதா, சிறுபான்மையினர் முக்கிய பிரமுகர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News