க.மாமனந்தல் ஆதி மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா நடந்தது. கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் க.மாமனந்தல் ஆதி மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி தலைமையில் 30 மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. சிறப்புப்பள்ளி தாளாளர் சிவசூரியன், முடநீக்குயல் வல்லுனர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்பும், உணவும் வழங்கப்பட்டது.