நெல்லை அடுத்துள்ள மேல குன்னத்தூர் காளியம்மன் கோயில் தெருவில் போலீசார் நேற்று(டிசம்பர் 25) சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட இரண்டு கிலோ 700 கிராம் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.61,960 பணம், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு முருகன்(45), பெருமாள் (60), செலுத்துரை (48) ஆகிய மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.