அரக்கோணம் பள்ளியில் மருத்துவ முகாம்!
பள்ளியில் சிறப்பு பொது மருத்துவ முகாம்
அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைபள்ளி, அரக்கோணம் ரோட்டரி சங்கம், குருவராஜபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கைனூர் ஊராட்சி மன்றம் சார்பில் மெட்ரிக் பள்ளியில் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை அரக்கோணம் தொகுதி சு.ரவி ம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முகாமில் சுமார் 300 பேர் சிகிச்சை பெற்றனர். ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, வேலூர் நாராயணி மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்திய ரத்ததான முகாமில் சுமார் 82 யூனிட் ரத்தம் தானம் வழங்கினர். நிகழ்ச்சிகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும மேலாளர் குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், நிர்வாக அலுவலர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைனூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, ரோட்டரி சங்க தலைவர் ஆர்.பி.ராஜா செயலாளர் நரேந்திர குமார், ஜி.மணி, கே.சதீஷ், கே.பி.கே.பிர பாகரன், மனோகர் பிரபு, கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் வீரமணி நன்றி கூறினார்.