கோவை: உலக உருண்டையைத் தாங்கும் மர மனிதன் சிலை !

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலக உருண்டையைத் தாங்கும் மர மனிதன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-26 04:41 GMT
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை மாநகரம் மேற்கு நாடுகளுக்கு இணையாக அழகுபடுத்தப்பட்டு வருகிறது. ரம்மியமான குளக்கரைகள், LED விளக்குகள், லண்டன் க்ளாக் டவர் போன்ற கட்டமைப்புகள் நகருக்கு அழகு சேர்த்துள்ளன. மேலும், ரேஸ்கோர்ஸ், சுங்கம் ரவுண்டானா போன்ற இடங்களில் நிறுவப்பட்ட வெண்கல குதிரை சிலை, உலக உருண்டை, பாரம்பரிய காளை மாடுகள் சிலை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் வகையில் சிக்னல் இல்லா ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரவுண்டானாக்களை அழகுபடுத்தும் வகையில், வடகோவை சிந்தாமணி ரவுண்டானாவில் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் உலக உருண்டையைத் தாங்கும் மர மனிதன் சிலை நிறுவப்பட்டுள்ளது.இந்த சிலையை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இணைந்து திறந்து வைத்தனர். மரங்கள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கோவை மாநகரம் நவீன வசதிகளுடன் கூடிய அழகான நகரமாக உருவெடுத்து வருகிறது.

Similar News