சங்கராபுரத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் குறித்த களப்பணி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கராபுரம் தாலுகாவிற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தாசில்தார் சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜி, பி.டி.ஓ., அய்யப்பன், வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, சீனுவாசன், மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கவுரி ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா வரவேற்றார். கூட்டத்தில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை நேரடியாக வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறையுடன் களப்பணி மேற்கொண்டு இடை நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும், தேர்ச்சியை அதிகரிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் சங்கராபுரம், கல்வராயன்மலை ஒன்றியத்திற்குட்பட்ட 115க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.