மாவட்ட பா.ஜ., வாஜ்பாய் பிறந்த நாள் விழா

விழா

Update: 2024-12-26 05:04 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.,சார்பில் தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பா.ஜ., மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ரகுநாதபாண்டியன், கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் அருள் பங்கேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவபடத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட துணை தலைவர் கருணாகரன், மூத்த நிர்வாகி பச்சையாப்பிள்ளை, ஒன்றிய நிர்வாகிகள் முத்தையன், விஜயகுமார், மணிகண்டன், நாகராஜ், சங்கர், சின்னதுரை உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய பொதுச் செயலாளர் ஏழுமலை நன்றி கூறினார்.

Similar News