தீ விபத்தில் மேலும் ஒரு பெண் பலி

திண்டுக்கல் சிட்டி மருத்துவமனை தீ விபத்தில் 6 பேர் இறந்த நிலையில் மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி பலி

Update: 2024-12-26 05:06 GMT
திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன், மாரியம்மாள், தேனி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த சுருளி, சுப்புலட்சுமி, திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர், கோபிகா ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த NGO-காலனியை சேர்ந்த ராஜசேகர் மனைவி பாலபவித்ரா(29) என்பவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News