ராணிப்பேட்டை அருகே சீட்டு கம்பெனி நடத்தி மோசடி!

சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்த நபர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

Update: 2024-12-26 05:32 GMT
ராணிப்பேட்டை நரசிங்கபுரம் பெல் ஊரகப்பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன், பாலசுப்ரமணியம் ஆகிய 2 நண்பர்களுடன் சேர்ந்து சீட்டுகம் பெனி நடத்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர் பாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 2008-ம் ஆண்டு நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு முருகேசன் தற்போது வரை கோர்ட்டில் ஆஜராகாமல் உள்ளதாக தெரிகிறது. எனவே அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந் தேதி நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Similar News