பனை விதைகள் நடும் வகையில், பனை விதைகள் நடும் திருவிழா இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பனை விதைகள் நடும் வகையில், பனை விதைகள் நடும் திருவிழா இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செம்பட்டி கண்மாயில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் பசுமை விருதுநகர் இணைந்து நடத்தும், பனை விதைகள் நடும் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பனை விதைகளை நடவு செய்து, தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பசுமை பரப்பை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பசுமை தமிழ்நாடு மற்றும் பசுமை விருதுநகர் இயக்கம் இணைந்து நாட்டு நலப்பணி, தேசிய பசுமைப்படை மாணவர்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊரணிகள், கண்மாய்களில் பனை விதைகள் நடும் வகையில், பனை விதைகள் நடும் திருவிழா இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள சுமார் 160 அரசு ஊரணி மற்றும் கண்மாய்களில் 26.12.2024 மற்றும் 27.12.2024 ஆகிய இரண்டு தினங்களில் சுமார் 44,000 பனை விதைகள் நடப்பட உள்ளது. அந்தவகையில் அருப்புக்கோட்டை பகுதிகளில் உள்ள 22 கண்மாய்களில் 4000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை செம்பட்டி குறிஞ்சாங்குளம் கண்மாயில் 300 பனை விதைகள் நடும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.