கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ---

கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ---

Update: 2024-12-27 11:34 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,இளம் பசுமை ஆர்வலர் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி அளிக்கும் கருத்தாளர்களுக்கான நான்கு நாள் சிறப்பு உண்டு உறைவிட பயிற்சி முகாம் மணிமுத்தாறில் உள்ள ATREE மையத்தில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியானது 27.12.2024 முதல் 30.12.2024 வரை நான்கு நாட்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் 25 ஆசிரிய பெருமக்கள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் மணிமுத்தாறில் உள்ள ATREE மையத்தில் தங்கி இயற்கை மற்றும் இயற்கை வள பாதுகாப்பு, சுற்றுப்புற சூழல் ஒருங்கமைப்பு போன்றவை சார்ந்து பயிற்சி பெறுவார்கள். மேலும் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் பார்வையிடுதல் தேரிக்காடுகள் மற்றும் புன்னக்காயில் பகுதிகளை பார்வையிடுதல் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்கள்.

Similar News