புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது?

மதுரை மாவட்டம் மேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா காண்பது எப்போது என்று மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.

Update: 2024-12-27 12:29 GMT
மதுரை மாவட்டம் மேலூரில் புதிய பேருந்து நிலையம் ரூ.6.60 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றது. தற்காலிக பேருந்து நிலையம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், புதிய பேருந்து நிலையம் உடனடியாக திறக்க கோரி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பணிகள் முடிந்த பல மாதத்திற்கு மேலாகியும் திறப்பு விழா காணாமல் காட்சி பொருளாய் உள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்

Similar News