மது போதையில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மது போதையில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

Update: 2024-12-27 12:35 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி, சீனிவாசபுரம் அருகிலுள்ள கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்தவர் தினேஷ்( வயது 36) திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். 'கேபிள் டிவி ஆபரேட்டர்' பணிபுரிந்தார்.கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, அதே போல் சண்டை ஏற்பட்டு, அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு துாங்கியுள்ளார். நேற்று காலை 6:30 மணியளவில் எழுந்தவர், போதையில் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News