விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த முன்னாள் எம் எல் ஏ

தர்மபுரியில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி சென்று பக்தர்கள் வாகனம் ஊத்தங்கரை அருகே விபத்துக்குள்ளானது அவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி ஆறுதல் தெரிவித்தார்

Update: 2024-12-27 12:42 GMT
இன்று 27.12.2024 தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே எட்டையாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற நிலையில் ஊத்தங்கரை அருகே பேருந்து பேருந்து விபத்துக்குள்ளானது பலத்த காயங்களுடன் 23 பேர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் இருந்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி IAS மற்றும் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA, நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் தங்கமணி , பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய கழக செயலாளர் சரவணன் , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கௌதம் , மாவட்ட ஆதிதிராவிட குழு நல அமைப்பாளர் ஸ்டாலின் , பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சூர்யா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News