அரசு கல்லூரி மாணவர்கள் துணை இராணுவ பணிக்கு தேர்ச்சி
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி NCC மாணவர்கள் இந்திய துணை ராணுவ பணிக்கு தேர்ச்சி ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டு
அரசு கலைக் கல்லூரி, தருமபுரியில் செயல் பட்டு வரும் தேசிய மாணவர் படை இராணுவப் பிரிவில் சேர்ந்து பயிற்ச்சி பெற்ற ராகுல் (2022) மற்றும் கவியரசன் (2021) என்ற இரு மாணவர்கள் இந்திய ராணுவத்தில் பணிபுரிய துணைநிலை இராணுவ பணிக்கு நடைப்பெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதற்காண பணி நியமன ஆணையை கல்லுரி முதல்வர்.(பொ) இராஜேந்திரன், முதல்வர் முணைவர் கண்ணன் அவர்கள் சார்பாக வழங்கி வாழ்த்தி அனுப்பினார். உடன் பயிற்சி பெற்ற NCC மாணவ - மாணவர்களும் தற்போது பயற்சி பெற்று வரும் NCC மாணவர்களும் பரிசு வழங்கியும் பாராட்டும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் அ.தீர்த்தகிரி ஏற்பாடு செய்து, இந்திய ராணுவத்தில் பணியாற்றவுள்ள மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறி வாழ்த்தி அனுப்பினார்.