கிராம நிர்வாக அலுவலர் மாற்றப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் கிராம நிர்வாக அலுவலரை எவ்வித காரணமும் இன்றி பணியிடமாற்றம் செய்த அதிகாரிகளை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2024-12-27 13:27 GMT
:- மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மன்னம்பந்தல் ஊராட்சியில் பணிபுரிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் திருமலைச்சங்கு மீது எவ்வித காரணமும் இன்றி பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.உரிய விளக்கம் தராமல் கிராம நிர்வாக அலுவலர் பணி மாறுதல் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து ஏராளமான அலுவலர்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேர்மையான முறையில் செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலரை அரசியல் அழுத்தம் காரணமாக அதிகாரிகள் பணி மாற்றம் செய்திருப்பதாக குற்றம்சாட்டி கோஷங்களை எழுப்பினர்.

Similar News