நாமக்கல் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்! மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்!

டிசம்பர் (27.12.2024) நடைபெற்ற இந்த சாதாரண கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...

Update: 2024-12-27 13:48 GMT
நாமக்கல் மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சியின் மாமன்ற கூட்ட அரங்கத்தில் மாநகராட்சி மேயர் து.கலாநிதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் செ.பூபதி,ஆணையாளர் இரா.மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாமக்கல் மாநகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் செயல்படுத்தப்பட வேண்டிய அரசுகளின் திட்டங்கள் குறித்து அவ்வப்போது மாநகர மன்றக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அனுமதி பெறப்படுகிறது.அதன்படி டிசம்பர் (27.12.2024) நடைபெற்ற இந்த சாதாரண கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாமன்ற உறுப்பினர்கள் வார்டு வாரியாக தங்கள் கோரிக்கை மற்றும் கருத்துரைகளை அளித்தனர்
.இக்கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் 2023 ன் கீழ் தொழில் உரிமங்கள் வழங்குவது குறித்த விதிகளில் விதிகளின்படி உரிமைக் கட்டணம் நிர்ணயம் செய்து தொழில் உரிமம் வழங்கிட அனுமதிக்கப்பட்டது.மேலும் பல்வேறு கட்ட பணிகளுக்கு மாவட்டத்தின் அனுமதி முன் வைக்கப்பட்டது.நாமக்கல் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு விதிமுறைகளின்படி உரிய பாதுகாப்பு அளிப்பது, ஏற்கனவே இதுகுறித்து நடைபெற்ற சம்பவத்தில், 2 பேரை பணி நீக்கம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.நாமக்கல் மாநகராட்சியின் இந்த சாதாரண கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News

கைது