விழுப்புரம் பூங்கா சீரமைப்பு: நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை

பூங்கா சீரமைப்பு: நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை

Update: 2024-12-27 16:01 GMT
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், சுமார் ரூ.5 கோடி செலவில், நவீன பூங்கா அமைந்துள்ளது.இங்கு, காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் நடை பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.சமீபத்தில் பெஞ்சல் புயலால் உருவான கனமழையால், நகராட்சி பூங்கா முழுவதும் தண்ணீர் தேங்கியது.இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு காரணமாக பூங்கா பூட்டப்பட்டது. பூங்காவில் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியது. இது பற்றி தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதனையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில், பூங்காவில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பூங்காவில் உள்ள மழை நீரை ராட்சத பம்ப் செட் மூலம் அகற்றும் பணி நேற்று துவங்கியது.

Similar News