திண்டிவனத்தில், வடக்கு மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்
மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேற்று காலை மாவட்ட வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாநில சட்டத்துறை இணை செயலாளர் அருள்மொழி தலைமை தாங்கினார். சுரேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் கோபிநாத் வரவேற்றார்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சேகர் சிறப்புரையாற்றினார். இதில் ஆதித்தன், அருணகிரி, விஜயகுமார், நெடுஞ்செழியன், அய்யனார், கமலக்கண்ணன், கிருஷ்ணன், புஷ்பராஜ், சுதாகர், கன்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் சென்னையில் வரும் ஜனவரி 18 ம் தேதி நடக்க உள்ள மாநில வழக்கறிஞர் மாநாட்டில் வடக்கு மாவட்டம் சார்பில் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.