விழுப்புரம் அருகே ஆட்டோ டிரைவர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்

ஆட்டோ டிரைவர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்

Update: 2024-12-28 03:00 GMT
விழுப்புரம் வழுதரெட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் விவேக், 24; ஆட்டோ டிரைவர். இவர், தனது நண்பரான ஸ்ரீபன் என்பவருடன், நேற்று முன்தினம் ஜானகிபுரம் டாஸ்மாக் கடை அருகே சென்று மது அருந்தியுள்ளார்.அப்போது, அருகில் மது அருந்தியிருந்த அத்தியூர்திருவாதியைச் சேர்ந்த சிவா,32; என்பவர், விவேக்கை பார்த்து, எந்த ஊர் என கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது, சாதி பெயரை சொல்லி திட்டி, விவேக்கை பீர் பாட்டிலால் பின் பக்க தலையில் சிவா தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த விவேக், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News