வளவனூர் அருகே பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

Update: 2024-12-28 03:02 GMT
விழுப்புரம் அடுத்த வளவனூர் குமாரகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மனைவி சுதா,30; அருகே உள்ள நரையூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்,48; செங்கல் சூளை மேஸ்திரியான இவரிடம், ரமேஷ் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை கூலியாக பெற்றுள்ளார்.இந்நிலையில், ரமேஷ் வீட்டில் இல்லாதபோது, அங்கு சென்ற செல்வம், ரமேஷின் மனைவி சுதாவிடம், உனது கணவருக்கு அதிகப்படியான கூலியை கொடுத்துவிட்டேன், அதனால், மீதியுள்ள ரூ.15 ஆயிரத்தை தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளதோடு, சுதாவை திட்டி, மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து சுதா அளித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார், செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News