குளித்தலையில் கேப்டன் நினைவு நாளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய நிர்வாகிகள்

காவியத் தலைவர் கேப்டன் அறக்கட்டளை சார்பில் படையலிட்டு தரிசனம் செய்த நிர்வாகிகள்;

Update: 2024-12-28 07:34 GMT
  • whatsapp icon
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பேருந்து நிறுத்தம் அருகே காவியத் தலைவர் கேப்டன் அறக்கட்டளை சார்பில் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு குருபூஜை விழா முன்னிட்டு விஜயகாந்த் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து தேங்காய், பழம், இட்லி, பொங்கல், இனிப்பு, காரம் உள்ளிட்ட உணவு வகைகளை வாழை இலையில் படையல் இட்டு சூடம் ஏற்றி மண்டியிட்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் குளித்தலை நகர நிர்வாகிகள் மணத்தட்டை விஜயகுமார், பாரதிநகர் வடிவேல், டிங்கர் முத்து, மருதையா, அப்துல் சலீம், முத்துவேல், ஜெயசீலன், ஜெய்சங்கர், பெரியபாலம் சரவணன், சக்திவேல், கோட்டை சரவணன், சலவை சக்தி, மருதூர் மூர்த்தி, வீரவல்லி நல்லதம்பி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்துகொண்டு கேப்டன் திருவுருவபடத்திற்கு மலர்களை தூவி மண்டியிட்டு கும்பிட்டு தரிசனம் செய்தனர்.

Similar News