மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவத்தை சூரிய ஒளி மூலம் வரைந்து சிவகாசியை சேர்ந்த இளைஞர் அசத்தியுள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவத்தை சூரிய ஒளி மூலம் வரைந்து சிவகாசியை சேர்ந்த இளைஞர் அசத்தியுள்ளார்.;
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவத்தை சூரிய ஒளி மூலம் வரைந்து சிவகாசியை சேர்ந்த இளைஞர் அசத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். இவர் தற்போது சூரிய ஒளி மற்றும் கண்ணாடி லென்ஸ் மூலமாக ரப்பர் பலகையில் நடப்பு முக்கிய சம்பவங்கள், விளையாட்டு வீரர்கள் சாதனைகள், சினிமா நட்சத்திரங்களின் படங்களை ஓவியமாக சூரிய ஒளி மூலமாக வரைந்து வருகிறார். இந்நிலையில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி விஜயகாந்தை நினைவுபடுத்தும் விதமாகவும் , நினைவை போற்றும் வகையில் அவரது உருவத்தை திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த ஓவிய கலைஞர் கார்த்திக் சூரிய ஒளியினால் அழகாக வரைந்து அசத்தியுள்ளார்.