முதல்வர் வருகை போக்குவரத்து மாற்றங்கள்:காவல்துறை அறிவிப்பு

முதல்வர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள்: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

Update: 2024-12-29 04:59 GMT
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை தருவதை முன்னிட்டு போக்குவரத்து வழித்தடங்கள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்கண்ட போக்குவரத்திற்கான வழித்தடங்கள்: 1. தூத்துக்குடி வாகைகுளம் விமானநிலையம் முதல் FCI ரவுண்டானா, FCI ரவுண்டானா முதல் திருச்செந்தூர் ரவுண்டானா, FCI ரவுண்டானா முதல் வசவப்பபுரம் மற்றும் தூத்துக்குடி நகருக்குள் எந்த ஒரு கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அனைத்து வகையான சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. 2. 29.12.2024 அன்று மதியம் 02.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும், 30.12.2024 அன்று காலை 07.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும் திருச்செந்தூர் ரவுண்டானா முதல் ஜார்ஜ் ரோடு அக்ஸார் ஜங்ஷன் வரையில் அனைத்து வாகனங்களும் வருவதை தவிர்த்து மாற்று பாதையில் செல்லவும். 3. திருச்செந்தூர் ரோடு மார்க்கமாக தூத்துக்குடி நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களும், திருச்செந்தூர் ரவுண்டானாவிலிருந்து வலது புறமாக திரும்பி வ.உ.சி துறைமுக ரோடு கேம்ப் - 1, நகர்விலக்கு, தெற்கு கடற்கரை சாலை ரோச் பார்க், பெல் ஹோட்டல் ஜங்ஷன், ஸ்டேட் பேங்க் ஜங்ஷன் வந்து வி.இ. ரோடு வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லவும். அதே போல் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும், வ.உ.சி ரோடு (WGC ரோடு) பழைய துறைமுகம், பனிமய மாதா கோவில், ரோச்பார்க், நகர்விலக்கு, வ.உ.சி துறைமுக ரோடு கேம்ப் - 1, திருச்செந்தூர் ரவுண்டானா வழியாக செல்லவும். 4. 30.12.2024 அன்று அரசு நிகழ்ச்சிக்கு வருகை தரும் முக்கிய நபர்கள் வரும் வாகனங்கள், அரசு வாகனங்கள், காவல்துறை வாகனங்கள், மற்றும் பத்திரிக்கையாளர்கள் வரும் வாகனங்கள் அனைத்தும் மாணிக்கம் மஹால் எதிரே உள்ள சால்ட் காலனி வழியாக தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பின்புறம் நுழைவாயில் வழியாக சென்று Golden Jubilee Building சுற்றியுள்ள பகுதிகளில் (Stage Right Back Side) வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லவும். 5. 29.12.2024 மற்றும் 30.12.2024 ஆகிய தினங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை வரவேற்க வருகை தரும் பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பின்வருமாறு வாகனங்களை நிறுத்தவும். 6. தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் திரு.வி.க.நகர், FCI குடோன் கீழ்புறம், 3வது மைல் மடத்தூர் P&T காலனி, பானுபிருந்தாவன் ஹோட்டல் அருகிலுள்ள பொதிகை கார்டன், பத்திநாதபுரம், கணேஷ்நகர், மில்லர்புரம் விகாசா பள்ளி ஏரியா, ஆயுதப்படை ஜங்ஷன் ரூபாவதி பேலஸ் ஏரியா மற்றும் சக்திவிநாயகர் பள்ளி ஜங்ஷனிலிருந்து சிதம்பரநகர், மற்றும் பிரையன்ட்நகர் பகுதிகள், மணிநகர் 1வது தெரு முதல் 4வது தெருகளிலிருந்து மணிநகர் மற்றும் டூவிபுரத்தில் பகுதிகளில் நிறுத்தவும். 7. தூத்துக்குடி காமராஜ் சாலையில் சுப்பையாபுரம் மற்றும் மாசிலாமணிபுரம் பகுதிகளில் நிறுத்தவும். 8. தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில், கால்டுவெல்காலனி 1வது தெரு முதல் 6வது தெரு வரையில் மற்றும் CGE காலனி 1வது தெரு முதல் 5வது தெரு வரையில் நிறுத்தவும். 9. ஜெயராஜ் ரோட்டில் SAV பள்ளி மைதானம் மற்றும் டூவிபுரம் பகுதிகளில் நிறுத்தவும். 10. 29.12.2024 அன்று Tidal Meo Park நிகழ்ச்சிக்கு வருகை தரும் வாகனங்கள் Tidal Neo Park எதிர்புறம் அமைந்துள்ள பெரியசாமிநகர் வாகன நிறுத்தத்தில் நிறுத்தவும். மேலும் தமிழக முதல்வர் வருகை தரும் குறிப்பிட்ட நேரத்தில் காவல்துறையினர் குறிப்பிடும் மாற்றுப்பாதைகளில் சென்றும், வாகனங்களை சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தாமல் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News