கனிம சுரங்கத்திற்கு எதிராக போராட்டம்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கனிம சுரங்கத்திற்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி கேசம்பட்டி பகுதி சுற்றுவட்டார மக்கள் டங்ஸ்டன் சுரங்க திட்ட ஏலத்தை உடனே கைவிட கோரியும், புதிய ஆய்வுகளோ திட்டத்தை விரிபடுத்தும் முயற்சிகளோ செய்யக்கூடாது என மத்திய பாஜக அரசை வலியுறுத்தியும், மதுரை மாவட்டத்தை தமிழ் பண்பாட்டு மண்டலமாகவும், முல்லை பெரியாறு பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றி அரசு இதழில் வெளியிட தமிழ்நாடு அரசை கோரியும் இன்று (டிச. 29) போராட்டத்தில் ஈடுபட்டனர்.