காரிமங்கலம் வாரச்சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்
காரிமங்கலம் செவ்வாய் வாரச்சந்தையில் 58 லட்சத்திற்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் கால்நடைகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். டிசம்பர் 31 நேற்று நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி நாமக்கல் திருவண்ணாமலை உட்பட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.நேற்றைய நடந்த சந்தையில் சுமார் 450 மாடுகள், 400 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், மாடுகள் தரம் மற்றும் ரகத்தை பொறுத்து 8000 முதல் 45 ஆயிரம் ரூபாய் வரையில் என 43 லட்சத்திற்கு மாடுகளும், ஆடுகள் அளவைப் பொறுத்து 3000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையில் என 12 லட்சத்திற்கு ஆடுகளும், நாட்டுக்கோழிகள் 300 ரூபாய் முதல் 1200 வரை என 3 லட்சத்திற்கு விற்பனையானது. ஒட்டுமொத்தமாக 58 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.