புத்தாண்டு விழா எஸ்பி பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்
புத்தாண்டு வரவேற்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் நள்ளிரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் தலைமையில் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்.
புத்தாண்டு வரவேற்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் நள்ளிரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் தலைமையில் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம். உலகம் முழுவதும் 2025 ஆம் புத்தாண்டு விழாவை வரவேற்கும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி பட்டாசு வெடித்து வான வேடிக்கையுடன் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடும் வகையில் நள்ளிரவில் 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. தூத்துக்குடி வி.இ சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். அப்போது காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் நகர உதவி கண்காணிப்பாளர் மதன், மத்திய பாகம் காவல்துறை ஆய்வாளர் பாஸ்கரன், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மயில், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறி செல்பி எடுத்துக் கொண்டனர். புத்தாண்டை கொண்டாடும் வகையில் நள்ளிரவில் காவல்துறையுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.