அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

தர்மபுரி பூ மார்க்கெட்டில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

Update: 2024-12-29 08:55 GMT
தர்மபுரி பேருந்து நிலையம் பூ மார்க்கெட்டில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் டிசம்பர் 29 இன்று விற்பனைக்காக கொண்டு வந்தனர். நாளை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக குண்டு மல்லி ஒரு கிலோ 1500 ரூபாய்கும், சன்னமல்லி ஒரு கிலோ 1400 ரூபாய்க்கும், கனகாம்பரம் ஒரு கிலோ 1000 ரூபாய்க்கும், ஜாதி மல்லி ஒரு கிலோ600 ரூபாய், சம்பங்கி ஒரு கிலோ 150 ரூபாய்,சாமந்திப்பூ 130 ரூபாய், பட்டன் ரோஸ் ரூ.200 செண்டு மல்லி ஒரு கிலோ 70 ரூபாய், அரளி ஒரு கிலோ 300 ரூபாய்க்கும், தர்மபுரி பேருந்து நிலையம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Similar News