மறைந்த இராணுவ வீரருக்கு இறுதி அஞ்சலி.
மதுரை அருகே மறைந்த இராணுவ வீரரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள பெரிய பூலாம்பட்டியை சேர்ந்த மாயாண்டி மகன் மாரிமுத்து (33) என்பவர் ராணுவ வீரராக காஷ்மீரில் பணிபுரிந்தார். இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதித்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிச. 28ல் உயிரிழந்தார். இவரது உடல் நேற்று (டிச.31) சொந்த ஊரான பெரியபூலாம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலுக்கு ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், வட்டாட்சியர் செல்லப்பாண்டி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.