உலகப் புகழ் பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி!
2025 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் வகையில் தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ் பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி ஏராளமானவர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி: 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் வகையில் தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ் பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி ஏராளமானவர்கள் பங்கேற்பு உலகம் முழுவதும் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது இந்த புத்தாண்டை வரவேற்கும் வகையில் தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது பேராலய பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இந்த ஆண்டு மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ பிரார்த்தனை மேற்கொண்டனர் மேலும் எந்த ஒரு பேரிடரும் வராமல் உலக மக்கள் அனைவரும் அமைதியாக வாழவும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வரவும் பிரார்த்தனை மேற்கொண்டனர் இந்த புத்தாண்டு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது புத்தாண்டு முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்