திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பழமையான மஹான் பெரிய மீரான் ஒலியுள்ளாஹ் தர்ஹாவின் கந்தூரி விழா வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இந்த கந்தூரி விழா தொடர்பான கந்தூரி கமிட்டி ஆலோசனை கூட்டம் தலைவர் நிஜாமுதீன் தலைமையில் இன்று (டிசம்பர் 29) நடைபெற்றது. இதில் கந்தூரியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.