சின்னசேலம் அடுத்த பாண்டியங்குப்பம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் பரமசிவம் மகன் செல்வராசன் 33, பாண்டியன் குப்பம் கிராமத்தில் ஓடை புறம்போக்கு நிலத்தில் தண்ணீர் செல்லும் பைப் லைனை துண்டித்தும், பள்ளம் தோண்டியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.இதனை அகற்ற நேற்று முன்தினம் பகல் 1 மணியளவில் சின்னசேலம் ஆர்.ஐ., மற்றும் பணியாளர்களுடன் வி.ஏ.ஓ., செல்வராசு பாண்டியங்குப்பம் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது வருவாய் துறை அதிகாரிகளை வழிமறித்த ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை தாக்க முயன்றுள்ளனர். இது குறித்த புகாரில் பாண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி 56, ஆறுமுகம் 55, தர்மராஜ் 28, தனம் 45, உள்ளிட்ட நான்கு பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.