செல்லத்தம்மன் கோவில் உற்சவ விழா.
மதுரை செல்லத்தம்மன் கோவில் உற்சவ விழா ஜன.20ல் தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலான வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோயில் உற்சவத் திருவிழா ஜனவரி 20-இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இங்கு கண்ணகி இடது கையில் சிலம்புடனும், வலது கையில் செண்டு ஏந்திய நிலையிலும் எழுந்தருளி உள்ளார். மதுரை வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவிலில் வருகிற 19-ந் தேதி இரவு வாஸ்து சாந்தியுடன் திருவிழா தொடங்குகிறது. 20-ந் தேதி கொடியேற்றத்துடன் உற்சவர் திருவிழா தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முத்தாய்ப்பாக 27-ந் தேதி செல்லத்தம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது செல்லத்தம்மன் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் எழுந்தருளுகிறார்.28-ந் தேதி சட்டத்தேரும், 29-ந் தேதி மலர் சப்பரமும் நடைபெறுகிறது.