சூரப்பட்டு அருகே பைக்கில் சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு!
சூரப்பட்டு அருகே பைக்கில் சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு!
விழுப்புரம் மாவட்டம்,கொல்லாங்குப்பம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் சிவஞானம் (47). இவா், தனது பைக்கில் பாட்டி தனலட்சுமியுடன் (70) விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.சூரப்பட்டு பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, பின்னால் தலைக்கவசம் அணிந்தவாறு பைக்கில் வந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா், தனலட்சுமி அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகையை பறித்துவிட்டு தப்பிச் சென்றாா்.இதுகுறித்த புகாரின்பேரில், கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.