விழுப்புரத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி சங்கம் தொடக்கம்

துப்பாக்கி சுடுதல் பயிற்சி சங்கம் தொடக்கம்

Update: 2025-01-06 03:52 GMT
விழுப்புரம் மாவட்ட துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி சங்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவா் பி.ஜேம்ஸ்ராஜா தலைமை வகித்தாா். பொருளாளா் டயனா சங்கத்தின் நோக்கம் குறித்து பேசினாா். துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி சங்கத்தை பொன்.கௌதமசிகாமணி தொடங்கி வைத்து பேசினாா்.விழாவில், முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், விழுப்புரம் நகரசபையின் முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ், சி.எஸ்.ஐ. ஆலயப் போதகா் இ.பில்லி கிரஹாம், விசிக மாவட்டச் செயலா் பெரியாா், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் வ.இருசன் மற்றும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி வீரா்கள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிகளை ஆா்.பி.பரத் ஒருங்கிணைத்தாா்.முன்னதாக, துப்பாக்கி சுடுதல் பயிற்சி சங்கத்தைச் சோ்ந்த மு.ராமமூா்த்தி வரவேற்றாா். ஆா்.ஜெயச்சந்திரன் நன்றி கூறினாா்.

Similar News