பெங்களூரை சேர்ந்த இஷா யாதவ் 21, கடந்த 4ம் தேதி இரவு 10 மணி அளவில் புதுச்சேரியிலிருந்து- பெங்களூருக்கு தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். செஞ்சியை அடுத்த கடலாடி குளம் கூட்ரோடு அருகே சென்ற போது செஞ்சியில் இருந்து வந்த கார் இஷா யாதவின் கார் மீது பின்பக்கம் மோதியது.இதில் இஷா யாதவும், பின்பக்கம் மோதிய காரில் வந்த செஞ்சி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த கார் டிரைவர் இம்ரான் பாஷா 23, காரில் வந்த முஷ்ரப் 24, முபாரக் 19, நவாஸ் 21, ஆகியோரும் காயம் அடைந்தனர். இஷாயாதவ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மற்ற நான்கு பேரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நல்லான் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.