மா.கம்யூ., மாநாட்டிற்கு வந்த எம்.பி.,க்கு உடல் நலம் பாதிப்பு
மா.கம்யூ., மாநாட்டிற்கு வந்த எம்.பி.,க்கு உடல் நலம் பாதிப்பு
விழுப்புரம் ஆனந்தா மண்டபத்தில், மா.கம்யூ., 24வது மாநில மாநாடு கடந்த 3ம் தேதி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில், மதுரை தொகுதி மா.கம்யூ., வெங்கடேசன் எம்.பி., பங்கேற்றார்.விழுப்புரம் நேருஜி ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று காலை 7:00 மணியளவில் கட்சியினருடன் நடை பயிற்சி மேற்கொண்டார். நேருஜி சாலையில் சென்றபோது, திடீரென அவருக்கு இடது கையில் வலி ஏற்பட்டுள்ளது. உடன் வந்தவர்களுடன் இதுகுறித்து கூறியுள்ளார்.அதையடுத்து, உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகள் செய்தனர். அப்போது, அஜீரண கோளாறு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். அதையடுத்து மதியம் 2.00 மணிக்கு வெங்கடேசன் எம்.பி., டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட வெங்கடேசன் எம்.பி., யை தமிழக முதல்வர் ஸ்டாலின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் வனத்துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, கலெக்டர் பழனி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று எம்.பி.,யிடம் நலம் விசாரித்தனர்.