செஞ்சி அருகே மாயமான முதியவர் சடலமாக மீட்பு

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

Update: 2025-01-06 03:46 GMT
செஞ்சி அடுத்த ஆர்.நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 92. இவர், நேற்று முன்தினம் மாலை 3:30 மணியிலிருந்து காணவில்லை.குடும்பத்தில் இருந்தவர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின் இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் தேடிப் பார்த்தபோது ஆறுமுகத்தின் வேட்டி வெளியே வந்தது. சந்தேகத்தில் செஞ்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இரவு 11 மணிக்குசம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்து ஆறுமுகம் உடலை மீட்டனர்.இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News