ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்த்துறை தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். தமிழ்சங்க காப்பாளர் முத்தமிழ்முத்தன் முன்னிலை வகித்தார்.புதுச்சேரி தமிழ் சங்க தலைவர் முத்து, தமிழ்நாடு காந்தி பேரவைத்தலைவர் விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினர். பாரதியாரின் 143ம் பிறந்தநாளையொட்டி தமிழ் இலக்கிய சொற்பொழிவு நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், தமிழ்த்துறை தலைவர் மற்றும் பேராசிரியர்களின் பணியை பாராட்டி விருதுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஜெயராமன், உதயம் ராம், அனிதா, கள்ளக்குறிச்சி தமிழ் கழக தலைவர் கலிய செல்லமுத்து, தியாகதுருகம் அன்னை தமிழ் சங்க தலைவர் வளர்மதிச்செல்வி, பாக்கியலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். தியாகதுருகம் பாரதியார் தமிழ் சங்க தலைவர் துரை முருகன் நன்றி கூறினார்.