கல்வராயன்மலை மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2025-01-01 03:50 GMT
கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் கல்வராயன்மலையில் வேட்டை தடுப்பு காவலர் பணிகளை வெளி ஆட்கள் மூலம் தேர்வு செய்யும் வனத்துறையின் முடிவை கண்டித்தும், மலையில் வசிக்கும் பழங்குடியினர் மக்களைக் கொண்டு வேட்டை தடுப்பு பணியாளர்களை நிரப்பவும், வன உரிமை சட்டத்தின் கீழ் மனு வழங்கிய பழங்குடியினர் மக்கள் அனைவருக்கும் பட்டா வழங்க கோரியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, ராமன், வெள்ளையன், தங்கராசு, ஆண்டி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News